மீண்டும் பாதிக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் சேவை
ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக இன்ஸ்டாகிராம்,பேஸ்புக் செயல்பாட்டில் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் பேஸ்புக் நிர்வாகம் தெரிவித்ததாவது, சிலருக்கு மீண்டும் இந்த ஆப்பை பயன்படுத்துவதில் புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து விரைவில் அது சரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல சில மணி நேரத்திற்கு இன்ஸ்டாகிராம் சேவையும் முடங்கியதாக தெரியவந்தது. மேலும் அதற்கும் அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில் அவர்கள் கூறியதாவது,
பழுது சரி செய்து வருவதாகவும் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.