ஆயுட் காலத்தை தெரிந்து கொள்ள இந்த எளிமையான பயிற்சி
வயது முதிர்ந்தவர்கள் தங்களது ஆயுட் காலத்தை தெரிந்து கொள்வதற்கு ஓர் எளிமையான பயிற்சி உதவும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒற்றைக் காலில் எவ்வாறு சமனிலையாக இருக்கின்றார்களோ அந்த அளவிற்கு ஆயுட் காலம் நீளமானது என தெரிவிக்கப்படுகின்றது.
பத்து செக்கன்களுக்கு ஒற்றைக் காலில் சமனிலையாக நிற்க முடியாத நபர்கள் அடுத்த வரும் தசாப்தத்தில் உயிர் ஆபத்தை எதிர்நோக்கக் கூடிய சாத்தியங்கள் வெகு அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானியாவிலிருந்து வெளி வரும் விளையாட்டு மருத்துவ சஞ்சிகையொன்றில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வயது முதிர்ந்தவர்களினால் ஒற்றை காலில் சமனிலையாக நிற்க முடியாவிட்டால் அவர்களுக்கு ஆபத்து அதிகம் என்றே கருதப்பட வேண்டுமென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
51 முதல் 75 வயது வரையிலான சுமார் 1700 பிரேஸில் பிரஜைகளிடம் இந்த ஆய்வு நடாத்தப்பட்டுள்ளது.
உதவியின்றி பத்து செக்கன்களுக்கு ஒற்றை காலில் சமனிலையாக நிற்க முடிந்தவர்களுக்கு ஆயுட் காலம் சற்றே அதிகம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு நிற்க முடியாதவர்கள் இருதய நோய், நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கின்றனர்.