ஈராக் வான்பரப்பில் வானூர்தி போக்குவரத்து தடை நீடிப்பு!
இஸ்ரேல் - ஈரான் போரால் , ஈராக்கின் வான்பரப்பில் வானூர்திப்போக்குவரத்து தடை எதிர்வரும் 3 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக ஈராக்கின் சிவில் வானூர்திப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் வானூர்திப் போக்குவரத்துப் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஈராக்கின் சிவில் வானூர்திப் போக்குவரத்து ஆணையத்தை மேற்கோள் காட்டி அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் தடை வரும் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் (12:00 PM local time / 09:00 GMT) வரை அமலில் இருக்கும். அதன்படி ஈராக்கிற்கு வரும் வானூர்திகள் , அங்கிருந்து செல்லும் வானூர்திகள் மற்றும் ஈராக் வான்வழியாகப் பறக்கும் வானூர்திகள் (Overflying) என அனைத்திற்கும் இந்தத் தடை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளைகுடா பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான பாதுகாப்புச் சூழல் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரத்தைப் பொறுத்து, இந்தத் தடையை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பதை அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.