ரஷ்ய விமானங்களுக்கு தடை; டிக்கெட் விலை உயருமா?
ரஷ்ய- உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் , பல நாடுகள் ரஷ்ய விமானங்கள் பறப்பதற்கு தடை வித்துள்ள நிலையில், விமான பயண் சீட்டுக்களின் விலை உயரலாம் என கூறப்படுகின்றது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டதை அடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஷ்ய விமானங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்ததைத் தொடர்ந்து, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட 36 நாடுகளுக்கு ரஷ்யாவின் வான்வெளி மூடப்பட்டது.
இதனையடுத்து ரஷ்ய விமானங்கள் மற்றும் தனியார் விமான நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரிட்டன் செல்லும் விமானங்களுக்கு ரஷ்யா கடந்த வாரம் தடை விதித்தது.
அதன் பின்னர் ஐரோப்பிய யூனியன் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஷ்ய விமானங்களுக்கு அந்த நாடுகளின் வான்வெளியை மூடுவதாக அறிவித்தது.
இந்த நிலையில் ரஷ்ய விமானக்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் பாதையில் மாற்றம் ஏற்படும் என கூறப்படும் நிலையில் , இதனால் டிக்கெட் விலை உயரும் என்றும் கருதப்படுகிறது.