பங்களாதேஷில் பயங்கர ரயில் விபத்து: 15 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்!
கிஷோர்கஞ்சில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியதில் 15 பேர் உயிரிழந்தாகவும் மற்றும் பலர் காயமடைந்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தலைநகர் டாக்காவில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பைரப் என்ற இடத்தில் பயணிகள் ரயில் சரக்கு ரயில் மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
டாக்கா நோக்கிச் சென்ற கோதுலி விரைவு வண்டி, சட்டோகிராம் நோக்கிச் சென்ற சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
விபத்தைத் தொடர்ந்து நாட்டின் பிற பகுதிகளுக்கான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.
இந்த விபத்தில் பலர் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது, ரயிலுக்கு அடியில் பலர் சிக்கியுள்ளதாக நேரில் பார்த்தவர்களை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த கோர விபத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணித்த 15 பேர் உயிரிழந்த நிலையில் மேலும், 100 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.