கனடிய மத்திய வங்கி அதிகாரி விடுத்துள்ள எச்சரிக்கை
கனடிய மத்திய வங்கியின் அதிகாரியொருவர் அடகு கடன் திருத்தம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கனடிய மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆணையாளர் கரோலின் ரொஜர்ஸ் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அடமான சந்தை தொடர்பில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அடமான சந்தையை மித மிஞ்சிய அளவில் திருத்தம் செய்வதன் மூலம் வீடு கொள்வனவு தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு காண்பது சாத்தியமில்லை என ரொஜர்ஸ் தெரிவித்துள்ளார்.
கேள்வி மற்றும் நிரம்பல் என்பனவற்றுக்கு இடையிலான சமநிலையின் அடிப்படையிலேயே வீடு கொள்வனவு இயலுமை தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
வெறுமனே அடமான சந்தையை மட்டும் இலக்காக வைத்துக் கொண்டு மேற்கொள்ளப்படும் கொள்கை திருத்தங்கள் வெற்றி அளிக்குமா என்பது சந்தேகம் என அவர் தெரிவித்துள்ளார்.
குறுகிய கால அடிப்படையில் எடுக்கப்படும் சில தீர்மானங்கள் நீண்ட காலத்தில் பாதக விளைவுகளை ஏற்படுத்த கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.