பீர் பாட்டிலை உடைத்த பேய்: அதிரவைக்கும் வீடியோ காட்சிகள்
அமெரிக்காவில் பார் ஒன்றில் பேய் பீர் பாட்டிலை உடைத்த வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தை அதிரவைத்துள்ளது.
அந்த வீடியோவில், மதுக்கடையில் பெண் ஒருவர், மறுபுறம் அமர்ந்திருக்கும் ஆணுடன் பேசிக்கொண்டிருக்கிறார்.
அப்பொழுது அந்தப் பெண் அந்த இடத்தை விட்டு நகர, திடீரென்று, அலமாரியில் வைக்கப்பட்டிருந்த ஒரு கண்ணாடி, தானாக கீழே விழுந்து உடைகிறது.
இத்தனைக்கும் அந்த பெண் அந்த மேசையை தொடவில்லை என்று வீடியோ காட்சியில் தெளிவாக தெரிகிறது. மேலும், இந்த பாரில் இது முதல் முறையாக இப்படி நடக்கவில்லை என்றும், இதுபோல் அடிக்கடி நடப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
Even the publicans, who believe they live among ghosts, were freaked outhttps://t.co/PxHl0LunpN
— Wiltshire Live (@Wiltshire_Live) December 9, 2021
இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.