கனடாவில் ஆரம்பப்பள்ளி ஆசிரியரின் மோசமான செயல்
கனடாவின் வான்கூவார் மாநகரப் பகுதியில் ஆரம்பப்பள்ளி ஆசிரியை பள்ளி வளாகத்தில் புகைபிடித்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
ஆசிரியை, தனது குழந்தைகள் வகுப்பறைக்கு அடுத்துள்ள கழிப்பறையில் பலமுறை புகைப்பிடித்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் பலரின் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா ஆசிரியர் ஒழுங்குமுறை ஆணையம் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது.
ஸ்டெஃபனி காஸ்டோரிஸ் (Stephanie Kastoris) என்ற ஆசிரியை தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளார். அதன்படி குறித்த ஆசிரியை ஒழுக்காற்று நடவடிக்கைகளை ஏற்க ஒப்புக்கொண்டுள்ளார்.
அந்த ஒப்பந்தத்தின் படி, 2024ஆம் ஆண்டு, பள்ளி மாவட்டம் ஆசிரியையின் நடத்தையைப் பற்றி புகார் அளித்ததுடன், அவரை மூன்று நாட்கள் சம்பளம் இன்றி இடைநீக்கம் செய்திருந்தது.
அதோடு, அந்த ஆசிரியை இரண்டு ஊழியர் கழிப்பறைகளிலும் புகைப்பிடித்ததை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
அவர் செய்த நடவடிக்கை, மாணவர்களுக்கு தவறான முன்னுதாரணத்தை வழங்கியது மற்றும் மாணவர் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்தியது என ஒழுங்குமுறை ஆணையம் தீர்மானித்துள்ளது.
எனினும், அவர் தனது தவறை ஒப்புக்கொண்டு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்ததால், கண்டனம் என்ற தண்டனை போதுமானது என்று ஆணையம் தீர்மானித்துள்ளது.