கனடாவில் ஏழு மாத குழந்தை மரணம் தொடர்பில் ஒருவர் கைது
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள வில்லியம்ஸ் லேக் நகரில், ஏழு மாத குழந்தை மரணமடைந்த சம்பவத்தில், ரஸல் சாலமன் என்ற ஆண் ஒருவர் மீது கொலை குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2023 டிசம்பர் 8ஆம் திகதி, வில்லியம்ஸ் லேக் நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சடலமாக கொண்டு வரப்பட்ட குழந்தையின் மரணத்திற்கான அறிகுறிகள் சந்தேகத்திற்கிடமானவையாக இருந்ததால், போலீசாருக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டது.
“குழந்தையின் உடலில் புண்கள் காணப்பட்டதையடுத்து, விசாரணை மேற்கொண்டபோது, அங்கே மேலும் ஒரு குழந்தை காயங்களுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது,” என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ரஸல் சாலமனுக்கு, குழந்தையின் மரணத்திற்காக இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டும், மற்றொரு குழந்தையை காயப்படுத்தியதற்காக உடல் காயம் விளைவிக்கும் தாக்குதல் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரஸல் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்ற ஆவணங்களின்படி, அவர் வரும் ஜூன் 5ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியுள்ளார்.
போலீசார் தற்போது குழந்தைகளுடன் குற்றஞ்சாட்டப்பட்டவருக்குள் உள்ள உறவுத் தொடர்புகளைப் பற்றி எந்தவிதமான தகவலையும் வெளியிடவில்லை.