கொல்லப்படலாம்... உயிர் பயத்தில் விளாடிமிர் புடினின் நெருங்கிய நண்பரான ஜனாதிபதி
பெலாரஸ் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் விஷம் வைத்து கொல்லப்பட்ட நிலையில், அடுத்த இலக்கு தாமாக இருக்கலாம் என அந்த நாட்டின் ஜனாதிபதி பீதியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெலாரஸ் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் விளாடிமிர் மேகி விஷம் வைத்துக் கொல்லப்பட்டுள்ளார். ரஷ்ய உளவு அமைப்பு உருவாக்கிய ரசாயனம் மூலமாகவே விளாடிமிர் மேகி கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவமானது பெலாரஸ் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, தமது சமையல் கலைஞர்கள், உதவியாளர்கள், மற்றும் பாதுகாப்பு வட்டத்தையே மாற்ற உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்தவார இறுதியில் 64 வயதான விளாடிமிர் மேகி மரணமடைந்த நிலையில், அவரது மரணத்திற்கு மாரடைப்பு காரணம் என கூறப்பட்டது.
ஆனால், விளாடிமிர் மேகி விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளார் எனவும், குறித்த ரசாயனத்தை ரஷ்ய உளவு அமைப்பானது உருவாக்கியது எனவும் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
குறித்த தகவல் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், உக்ரைன் விவகாரத்தில் பெலாரஸ் எப்போது தங்கள் பக்கம் இருக்கவேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில், ரஷ்யா இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ரஷ்ய ஜனாதிபதியின் நெருங்கிய நண்பரான அலெக்சாண்டர் லுகாஷென்கோ தற்போது உயிர் பயத்தில் உள்ளார்.
ஆனால், விளாடிமிர் மேகி படுகொலைக்கு பின்னால் போலந்து இருப்பதாகவும், ரஷ்யாவை வெளிப்படையாக ஆதரிக்கும் விளாடிமிர் மேகி கொலை செய்யப்பட வாய்ப்பில்லை எனவும் கூறுகின்றனர்.