வாக்னர் குழு தலைவரின் மறைவிடத்தை வெளிப்படுத்திய பெலாரஸ் ஜனாதிபதி
வாக்னர் குழுவின் தலைவர் ரஸ்யாவிலேயே உள்ளதாகவும் அவர் எங்கும் செல்லவில்லை எனவும் பெலாரஸின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகங்களுடனான கருத்துப்பகிர்வின்போது சிஎன்என்னிற்கு பெலாரஸ் ஜனாதிபதி அலக்ஸாண்டர் லுகன்ஸ்கோ இதனை தெரிவித்துள்ளார்.
யெவ்ஜெனி பிரிகோசினை பொறுத்தவரை அவர் சென்பீட்டர்ஸ்பேர்க்கில் உள்ளார் என்றும் பெலாரஸ் ஜனாதிபதி குறிப்பிட்டார் .
என்னிடம் கேள்வி எழுப்பக்கூடாது
இன்று காலை அவர் மொஸ்கோவிற்கோ அல்லது வேறு எங்கோ செல்லக்கூடும் என பெலாரஸ் தெரிவித்துள்ளார். எனினும் அவர் பெலாரஸில் இல்லை என லுகன்ஸ்கோ தெரிவித்துள்ளார்.
அதோடு வாக்னர் குழுவினர் எங்குள்ளனர் என்பது குறித்து என்னிடம் கேள்வி எழுப்பக்கூடாது என தெரிவித்த அவர், ஏன் என்றால் அது ரஸ்ய நிறுவனம் அவர்கள் தங்கள் முகாம்களிலேயே உள்ளதாகவும் கூறினார்.