தினசரி அன்னாசிப்பழத்தை உட்கொள்வதால் உண்டாகும் அற்புத பலன்கள் என்ன தெரியுமா?
Dry skin
Cough
Cold fever
Joint Pain
By Kishanthini
இயற்கை நமக்கு அளித்துள்ள கொடைகளில் முக்கியமான பழங்களில் ஒன்று அன்னாச்சி பழம். அன்னாசியில் மாங்கனீஸ் சத்துக்கள் நிறைய உள்ளன.
மேலும் இதில் உள்ள தையாமின் மற்றும் வைட்டமின் பி சத்து, உடலில் உள்ள சுரப்பிகளின் செயல்பாட்டை சீராக்குகிறது. இதனால் உடலுக்கு அதிக சக்தி கிடைக்கிறது.
இது பல ஆரோக்கி நன்மைகளை அள்ளித்தருகின்றது. தற்போது அன்னாசிப்பழம் சாப்பிடுவதனால் ஏற்படும் அற்புத நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
- அன்னாசிப்பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கிறது. இது தோல் வறட்சியைத் தடுக்கிறது மற்றும் சருமத்தை மென்மையாக்குகிறது.
- அன்னாசிப்பழத்தை உட்கொள்வதன் மூலம், முடி உதிர்தலைத் தடுக்க முடிகிறது. அன்னாசிப்பழத்தில் வைட்டமின் சி போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை முடி உதிர்வதைத் தடுக்கிறது.
- அன்னாசிப்பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. இது சளி மற்றும் இருமலை நீக்குகிறது.
- அன்னாசிப்பழத்தின் சாப்பிடுவதால் உடலில் உள்ள கொழுப்பின் அளவை பராமரிக்க உதவுகிறது. இது இதயத்தை பாதுகாக்கிறது.
- அன்னாசிப்பழத்தை தினசரி உட்கொள்ள வேண்டும். அன்னாசிப்பழத்தில் நிறைந்துள்ள மாங்கனீசு எலும்புகளை வலுப்படுத்துகிறது மற்றும் மூட்டுவலி போன்ற எலும்பு தொடர்பான பிரச்சினைகளைத் தடுக்கிறது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US