தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலை சாப்பிட்டால் கிடைக்கும் பயன் என்ன தெரியுமா?
By Kishanthini
வேர்கடலை தரையில் இல்லாமல் நிலத்திற்கு அடியில் வளரும் ஒரு தாவரம் ஆகும். பாலிபினால்கள், ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற பிற செயல்பாட்டு சேர்மங்கள் இதில் அடங்கியுள்ளது.
அதுமட்டுமின்றி வேர்க்கடலைகள், ரெஸ்வெராட்ரோல், பீனாலிக் அமிலங்கள், ஃபிளாவோனாய்டுகள் மற்றும் பைட்டோஸ்டெரோல்கள் போன்ற கலவைகளின் ஒரு பெரிய ஆதாரமாக இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனை தினமும் ஒரு கைப்பிடி அளவு சாப்பிடுவது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தருகின்றது. தற்போது வேர்க்கடலை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
- வேர்க்கடலையில் தேவையான அளவு நல்ல கொழுப்புகள் அதிக அளவு உள்ளது. இது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தையும் கரைத்து உங்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றது.
- குழந்தைகளுக்கு தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலையை கொடுத்து வந்தால் அவர்களின் வளர்ச்சி வேகமாக இருக்கும்.
- வேர்க்கடலையில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. முக்கியமாக இதனை அவித்து உண்ணும்போது ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் சக்தி இன்னும் பெருகுகின்றது. உங்கள் உடலில் ஏற்படும் பிரீ ராடிக்கல் செல் அழிவினை ஏற்படாமல் காக்க ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் முக்கிய பங்கினை வகிக்கின்றது.
- வேர்க்கடலையில் அதிக அளவு வைட்டமின் இ மற்றும் புரதம் நிறைந்துள்ளது. உங்களின் சரும ஆரோக்கியத்திற்கு வைட்டமின் இ மிக மிக முக்கியமான ஒன்று.மேலும் ப்ரோடீன் மற்றும் வைட்டமின் இ உங்களுக்கு ஆரோக்கியமான சருமத்தினை அளிக்கின்றது.
- வேர்க்கடலையில் அதிக அளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்து நிறைந்துள்ளது. இதனை நீங்கள் தினமும் உண்டு வரும்போது உங்கள் எலும்புகளின் வலிமையினை அதிகரிக்கின்றது.மேலும் பற்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகின்றது.
- தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்கடலையினை உண்டு வந்தால் உங்களுக்கு முடி கொட்டுதல் பிரச்சினை முற்றிலுமாக கட்டுக்குள் இருக்கும். மேலும் உங்களுக்கு ஆரோக்கியமான முடி வளர வழி வகுக்கும்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US