தேங்காய் பூ சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?
immunity
weight loss
Thyroid
Kidney damage
By Kishanthini
தேங்காய் நன்கு முற்றிய பிறகு தேங்காய்யின் கரு வளர்ச்சி தான் தேங்காய்பூ தேங்காய், இளநீரில் எவ்வளவு ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளது.
அதே அளவு ஊட்டச்சத்து தேங்காய் பூவிலும் இருக்கின்றது. அதை விட மிக அதிக அளவிலான ஊட்டச் சத்துக்கள் இந்த தேங்காய் பூவில் தான் இருக்கிறது.
அதுமட்டுமின்றி பல அற்புத நன்மைகள் இதில் உள்ளது. அந்தவகையில் தேங்காய்பூவை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- பருவ கால தொற்று நோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை தேங்காய்ப்பூ கொடுக்கும். தைராய்டு பிரச்னையில் பாதிக்கப்பட்டவர்கள் தேங்காய்ப்பூவை சாப்பிடுவதால் தைராய்டு சுரப்பை குணப்படுத்தலாம்.
- தேங்காய்ப் பூ உண்பதால் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்கவும் முடிகிறது. இதில் குறைந்த அளவு கலோரி இருப்பதால் உடல் எடை குறையும்.
- புற்றுநோய் செல்களைத் தூண்டுகிற ஃப்ரீ ரேடிக்கல்ஸை நம்முடைய உடலிலிருந்து வெளியேற்றும் ஆற்றலைக் கொண்டது தேங்காய்ப்பூ.
- தேங்காய்ப்பூவில் தேங்காய் மற்றும் இளநீரில் இருப்பதைவிட அதிக சத்துக்கள் இருக்கிறது. தேங்காய்ப்பூவில் மிக அதிகமான ஊட்டச்சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி இரு மடங்கு அதிகரிக்கும்.
- தேங்காய்ப்பூ இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. இதனால் ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை கட்டுப்படுத்த இயலுகிறது. ஜீரண சக்தி குறைவாக இருந்தால் தேங்காய்ப்பூ சிறந்த மருத்துவமாகும். இதிலுள்ள மினரல், வைட்டமின் குடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. மலச்சிக்கலை குணமாக்குகிறது.
- தேங்காய்ப்பூவில் முக்கியமாக முதுமையைத் தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடெட் நிறைய உள்ளது. சுருக்கங்கள், வயதான தோற்றம், சரும தொய்வு போன்றவை நம்மை நெருங்க விடாது.
- சிறுநீரக பாதிப்பை குறைக்கும் திறன் தேங்காய்ப் பூவுக்கு உண்டு. மேலும் சிறுநீரகத் தொற்றுநோய்களையும் குணப்படுத்துகிறது. நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியமான சிறுநீரகத்தை தேங்காய் பூவினால் பெறலாம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US