பெளத்த பிக்கு ஒருவரை அதிரடியாக கைது செய்த அதிகாரிகள்! வெளியான அதிர்ச்சி பிண்ணனி
நாட்டில் பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கியிருந்த யானை தந்தங்களை 50 இலட்சத்திற்கு கடத்தல்காரர்கள் ஊடாக விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்த விஹாரை ஒன்றின் விஹாராதியான பௌத்த பிக்குவை பாணந்துறை வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பாணந்துறை வலான மத்திய ஊழல் ஒழிப்பு செயலணியின் பணிப்பாளர் உதய குமாரவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் மாத்தறை பிரதேசத்தில் நபர் ஒருவர் பாரிய தந்தம் ஒன்றை விற்பனை செய்வதற்காக கொள்வனவு செய்பவரை தேடுவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து விசேட பொலிஸ் குழுவினால் பிக்கு கைது செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பிக்குவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பல முக்கிய தகவல்களின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்தே பௌத்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.