கொலை முயற்சிக்கு பைடன், ஹாரிஸ் காரணம்; குற்றம் சுமத்தும் டிரம்ப்
தமது உயிருக்குப் பாதிப்பை ஏற்படுத்திருக்கக்கூடிய அண்மைச் சம்பவங்களுக்கு அதிபர் ஜோ பைடனும் (Joe Biden) துணையதிபர் கமலா ஹாரிசும் (Kamala Harris) காரணம் என டொனால்ட் டிரம்ப் (Donald Trump) குறைகூறியுள்ளார்.
அவர்களின் பேச்சுகளும் கருத்துகளும் அத்தகைய நடவடிக்கைகளைத் தூண்டுவதாக டிரம்ப் சொன்னார். நேற்று முன்தினம் (15 செப்டம்பர்) டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைதானார்.
தாக்குதலை நடத்த முயன்றதாக நம்பப்படும் 58 வயது ராயன் வெஸ்லி ரூத் (Ryan Wesley Rooth) புளோரிடா கோல்ஃப் திடலில் பல மணி நேரம் ஒளிந்திருந்து காத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
அதேவேளை இரண்டு மாதங்களில் டிரம்ப் மீது நடத்தப்பட்டுள்ள இரண்டாவது கொலை முயற்சி இது ஆகும். அதேவேளை டிரம்ப் மீதான அண்மைச் சம்பவத்துக்கும் அனைத்து வகை அரசியல் வன்முறைக்கும் அதிபர் பைடன் கண்டனம் தெரிவித்தார்.
அத்துடன் முக்கியப் பிரமுகர்களைப் பாதுகாக்க அமெரிக்க உளவுத்துறைக்குக் கூடுதல் உதவி தேவைப்படுவதாகவும் அதிபர் பைடன் கூறினார்.