பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ளும் முதல் திருநங்கை..யார் தெரியுமா?
ரசிகர்கள் நீண்ட நாடுகளாக ஆவலாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 5 இந்த நிகழ்ச்சியை கடந்த 4 சீசன்களிலும் தொகுப்பாளராக இருந்த கமல் ஹாசன் அவர்கள் தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்குகிறார்.
இந்த நிலையில் தற்போது இன்றைய தினத்தில் மாலை 6 மணியளவில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதில் பிக் பாஸ் சீசனில் முதல் முறையாக திருநங்கை ஒருவர் பங்கேற்கிறார்.
அவர் தான் 2014 ஆம் ஆண்டு திருநங்கைகளுக்கான மிஸ் சென்னை போட்டியில் கலந்துகொண்டு வென்ற நமீதா மாரிமுத்து.
இவர் ஒரு சில டிவி சீரியல்களிலும், நாடோடிகள் 2 என்ற படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் இவர் 2015 மிஸ் கூவாகம், 2018 மிஸ் இந்தியா போன்றவை வென்றவர். மேலும் இவர் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான திருநங்கை உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டுள்ளார்.
தெலுங்கு பிக் பாஸ் மூலம் திருநங்கைகள் கலந்துகொண்டு அமோக வரவேற்பை பெற்றது அந்த சீசன் பிக் பாஸ். தற்போது தமிழ் பிக் பாஸும் அதே பாணியை பின்பற்றுகிறது.