இந்திய தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு நன்றி தெரிவித்த பில் கேட்ஸ்
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இந்தியாவில் தடுப்பூசிகளை தயாரிப்பவர்களை பாராட்டினார்.
இந்திய தூதரகம் சார்பில் இந்திய-அமெரிக்க நலன்கள் குறித்த ஆன்லைன் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய உலகின் மிகப்பெரிய பணக்காரரும், மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ், கடந்த ஆண்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 15 கோடி தடுப்பூசிகளை இந்தியா வழங்கியது என்றார்.
அதற்காக இந்தியாவில் உள்ள தடுப்பூசி தயாரிப்பாளர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். மேலும், நிமோனியா மற்றும் ரோட்டா வைரஸ் போன்ற நோய்கள் குழந்தைகளுக்கு வராமல் தடுக்க உலகின் பல நாடுகள் தடுப்பூசிகளை வழங்குகின்றன.
பில்கேட்ஸ் தனது உரையில், நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் திறன்களை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் உலக சுகாதாரத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பேணுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாக குறிப்பிட்டார்.