நாடொன்றில் தீவிரமடையும் பறவைக்காய்ச்சல்; ஆண்டின் இறுதிவரை நீடிக்கப்பட்ட அவசரநிலை
தென் அமெரிக்கா நாடான பெருவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
இதில் பெருவின் தலைநகர் லிமா மற்றும் வடக்கு கடலோர பகுதிகளில் பறவைக் காய்ச்சலால் கடல் சிங்கங்கள், பெலிகான் பறவைகள், நீர்நாய்கள், பூனைகள் மற்றும் கிரிஸ்லி கரடிகள் பாதிப்படைந்துள்ளன.
அங்கு இதுவரை 716 கடல் சிங்கங்கள் மற்றும் 63000 க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்துள்ளதாக அரசாங்க நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வட அமெரிக்காவிலிருந்து பறந்து வரும் புலம்பெயர்ந்த பறவைகளால் உள்ளூரில் பறவைக் காய்ச்சல் வருகிறதாக தெரிவித்தாதிகாரிகள் , தேசிய வனவியல் பூங்கா மற்றும் கடற்கரையில் உள்ள கடல் சிங்கங்கள் மற்றும் கடற்பறவைகளைத் தொட வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர்.
மேலும் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளை தொட வேண்டாம் என்றும் சுகாதார அமைச்சகம் மக்களை எச்சரித்துள்ளது.
இதனிடையே நாட்டின் பிற பகுதிகளுக்கும் பறவை காய்ச்சல் வேகமாக பரவும் என்பதால் பெருவில் தேசிய சுகாதார அவசரநிலை இந்த ஆண்டு டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.