இலங்கையில் இருந்து புறப்பட்ட துருக்கிய விமானம் அவசமாக தரையிறக்கம்!
கொழும்பு கட்டுநாயக்கவிலிருந்து இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட துருக்கிய ஏர்லைன்ஸ் வானூர்தி, அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட போது பறவையுடன் மோதி, இலங்கையின் மேற்கு வான்பரப்பில் நீண்டநேரம் வட்டமிட்டுக்கொண்டிருந்த துருக்கி நாட்டு பயணிகள் விமானம் இன்று சனிக்கிழமை (11) காலை 10:24 மணியளவில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
துருக்கி விமான சேவைக்குச் சொந்தமான 'TK-731' என்ற 'A330' ரக பரந்த உடற்பகுதியைக் கொண்ட இந்த விமானம், இன்று காலை 7:07 மணியளவில் 246 பயணிகளுடன் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட போதே இந்த விபத்துக்கு முகங்கொடுத்திருந்தது.
விமானத்தில் பறவை மோதியதைத் தொடர்ந்து துருக்கிய ஏர்லைன்ஸ் வானூர்தி மீண்டும் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில், பாதுகாப்பாகத் தரையிறங்கியுள்ளதாக இலங்கை சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகார சபை உறுதிப்படுத்தியுள்ளது.

துருக்கி விமான சேவைக்குச் சொந்தமான 'TK-731' என்ற 'A330' ரக பரந்த உடற்பகுதியைக் கொண்ட இந்த விமானம், இன்று காலை 7:07 மணியளவில் 246 பயணிகளுடன் கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்டுள்ளது.
பறவை மோதியதால் ஏற்பட்டுள்ள அவசர நிலைமையைத் தொடர்ந்து, விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.
விமானத்தின் எடையைக் குறைத்துப் பாதுகாப்பாகத் தரையிறக்கும் நோக்கில், முதலில் சிலாபம் வான்பரப்பில் மிகக் குறைந்த உயரத்தில் பறந்து எரிபொருளைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விமானம் , அதன் பின்னர் பாதுகாப்பாக தரையிரகியது.