கனடாவில் ‘பிஷ்னோய் கும்பல்’ பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு
இந்தியாவைத் தளமாகக் கொண்ட பிஷ்னோய் கும்பல், ஓர் பயங்கரவாத அமைப்பு என கனடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
கனடாவில் சிக்குத் தலைவர்களை அச்சுறுத்தி, வன்முறைகளை திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு பாதுகாப்பு, உளவுத்துறை மற்றும் காவல்துறை நடவடிக்கைகளுக்கு வலுசேர்க்கும் என கனடா பொது பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி, கூறியுள்ளார்.
பிஷ்னோய் கும்பல் கொலை, துப்பாக்கிச் சூடு, தீவைத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுகிறது. மிரட்டல் மற்றும் பிணையம் மூலம் சமூகத்தில் பயத்தை உருவாக்குகிறது.
முக்கிய சமூக தலைவர்கள், வணிகர்கள், கலாச்சார நபர்கள் குறிவைக்கப்படுகின்றனர்,” என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
லாரன்ஸ் பிஷ்னோய் தலைமையிலான இந்த கும்பல், இந்திய சிறையில் இருந்தபடியே தனது குற்றச்செயல்களை ஒருங்கிணைத்ததாக கூறப்படுகிறது.
கும்பலின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம், வங்கி கணக்குகள் முடக்கப்படலாம் எனவும் கனடாவில் இருந்து யாரும் கும்பலுக்கு நிதி அல்லது உதவி வழங்குவதைத் தடை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.