விபத்துக்குள்ளான துருக்கி இராணுவ விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு
ஜோர்ஜியாவில் விபத்துக்குள்ளான துருக்கிய இராணுவ விமானத்தின் கருப்பு பெட்டி கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அசர்பைஜானில் இருந்து புறப்பட்ட சரக்கு விமானமானது, ஜோர்ஜியாவின் எல்லையைக் கடந்த சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 20 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புலனாய்வாளர்கள் விமானத்தின் கருப்புப் பெட்டியைக் கண்டுபிடித்துள்ளதாகவும், விபத்துக்கான காரணம் என்ன என்பதை ஆராய்ந்து வருவதாகவும் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விசாரணைக்காக 46 பேர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.