ரஷ்யா தலைமை தேர்தல் ஆணையர் மீது கருப்பு மை வீச்சு ; வெளியான பரபரப்பு வீடியோ
ரஷியாவுக்கு ஆதரவாக உள்ள ஜார்ஜியன் டிரீம் கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இன்று தேர்தல் முடிவுகளை அறிவிக்கப்பட இருந்த நிலையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த டாவிட் திடீரென அனைவர் முன்னிலையிலும் தலைமை தேர்தல் ஆணையர் ஜியோர்ஜி மீது கருப்பு மையை ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரஷியவுக்கு நெருக்கமான நாடாக உள்ள ஜார்ஜியாவில் கடந்த அக்டோபர் 26 ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடந்தது. இதன் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்ட நிலையில் ரஷியாவுக்கு ஆதரவாக உள்ள ஜார்ஜியன் டிரீம் கட்சி 53.93 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சி தனது தோல்வியை ஏற்க மறுத்துள்ளது. ஜார்ஜியா தலைநகர் திப்லிசி - இல் உள்ள மத்திய தேர்தல் ஆணைய கட்டடத்தின் வெளியே ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Black paint is splashed into the face of Giorgi Kalandarishcili, Chairman of the Central Election Commission of Georgia as he was preparing to announce the final results of the October 26 parliamentary elections which both opposition and civil society consider fraudulent and not… pic.twitter.com/Z0ArxuWUPY
— Formula NEWS | English (@FormulaGe) November 16, 2024