ரத்த தானம் செய்து 24 லட்சம் குழந்தைகளை காப்பாற்றியவர் காலமானார்
ஆஸ்திரேலியாவில் ரத்த தானம் செய்து 24 லட்சம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய ஜேம்ஸ் ஹாரிசன் உயிரிழந்துள்ளமை ஆஸ்திரேலியா மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜேம்ஸ் ஹாரிசன் அப்பகுதி மக்களால் தங்கக் கை மனிதர் என அழைக்கப்படுகிறார்.
1,173 முறை ரத்த தானம்
பிரசவத்தின்போது தாய்மார்களிடம் இருந்து குழந்தைகளுக்கு பரவும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை தடுக்க ஆண்டி-டி என்ற அரியவகை ஆண்டிபாடி தேவைப்படுகிறது.
இந்த அரியவகை ஆண்டிபாடி ஜேம்ஸ் ஹாரிசனின் ரத்தத்தில் அதிகளவில் இருந்ததால் அதன் மூலம் பல பிறக்கும் குழந்தைகளை காப்பாற்ற முடியும் என தெரிய வந்துள்ளது.
இதையடுத்து தனது 18 வயதில் ரத்த தானத்தை தொடங்கிய ஜேம்ஸ் ஹாரிசன் தனது 81வது வயது வரை 1,173 முறை ரத்த தானம் செய்துள்ளார். அவரது ஆண்டிபாடியினால் 24 லட்சம் பச்சிளம் குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளன.
சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஜேம்ஸ் ரத்த தானம் செய்வதை நிறுத்திக் கொண்டார்.
இந்நிலையில் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமான நிலையில் அவரது மறைவுக்கு ஆஸ்திரேலிய மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.