“ஆசியாவின் ராணி” இலங்கையில் கிடைத்த 300 கிலோ எடை கொண்ட நீலக்கல்
ஆசியாவின் ராணி என்றழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய 300 கிலோ எடை கொண்ட நீலக்கல் இலங்கை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து 85 கி.மீ தொலைவில் உள்ள ரத்தன்புரா (Ratnapura) நகரத்தில் உள்ள சுரங்கத்தில் இருந்து மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த அரிய ரத்தினக் கல் கண்டெடுக்கப்பட்டது.
சுமார் 310 கிலோ எடை கொண்ட இந்த கல் குறித்த தகவல்களை இலங்கை அரசின் தேசிய ரத்தினம் மற்றும் ஆபரண ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதாவது, இந்த நீல சபையர் கல், மிகவும் மதிப்புமிக்க ரத்தினக் கல் என்ற சான்றளித்துள்ளது. இந்த மதிப்புமிக்க ரத்தினக்கல், சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
எனவே, இந்த ரத்தினக்கல் தொடர்பாக மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க (Thilak Weerasinghe) தெரிவித்துள்ளார்.
மேலும் சுரங்கத்திற்கும் பல சுத்தமான ரத்தினக் கற்கள் இருக்கக்கூடும். எனவே சுரங்கத்திலும் மேலும் தேடும் பணி தீவிரப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.