பொலிஸார் நடத்திய தாக்குதல்... நடுக்கடலில் விபத்துக்குள்ளான படகு! 50 பேர் உயிரிழப்பு
ஹைதி நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸ் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அந்நாட்டில் அரசியல் நிலைத்தன்மையின்றி ஆயுத கும்பல்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.
இதேவேளை, தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸ் உள்ளிட்ட பல இடங்களை ஆயுத கும்பல் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
இவ்வாறானவொரு சூழலில் அங்குள்ள அர்காஹே நகர கடற்பகுதியில் ஆயுத கும்பல் ஒரு படகில் சென்றனர்.
இவர்கள் அருகில் உள்ள நகரங்களில் தாக்குதல் நடத்துவதற்காக வெடிமருந்துகளை ஏற்றிக் கொண்டு சென்றனர்.
இது தொடர்பில் தகவலறிந்த பொலிஸார் அங்கு விரைந்து சென்று அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இதிலிருந்து தப்பிக்க வேகமாக சென்றபோது அங்குள்ள ஒரு பாறை மீது மோதி படகு கவிழ்ந்தது விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் 50 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு பொலிஸார் தக்வல் வெளியிட்டுள்ளனர்.