பிரித்தானிய பொலிசாரிடம் சிக்கிய படகு... மோசமான காரணத்துக்காக தலைப்புச் செய்தியானதால் வருந்தும் கனேடியர்

Canada Police
By Balamanuvelan Sep 17, 2021 08:14 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

Report

கனேடியர் ஒருவரும் அவரது மனைவியும் ஆசையாக வடிவமைத்த படகு ஒன்று தலைப்புச் செய்தியாகியுள்ளது. ஆனால், அது போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தலைப்புச் செய்தியாகியுள்ளதால் வருத்தமுற்றுள்ளார் அந்த படகின் முன்னாள் உரிமையாளரான கனேடியர் ஒருவர்.

வான்கூவரிலுள்ள தன் வீட்டிலிருந்தபடி தொலைக்காட்சியில் வெளியான அந்த செய்தியை சோகத்துடன் கவனித்துக்கொண்டிருக்கிறார் Peter White-Robinson (73).

அந்த செய்தியில், Kahu என்ற உல்லாசப்படகு, ஐரோப்பா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் தலைப்புச் செய்தியாக கவனம் ஈர்த்துள்ளதைக் குறித்த விவரம் அலசி ஆராயப்படுகிறது.

கரீபியன் கடற்பகுதியிலிருந்து ஆங்கிலக் கால்வாய்க்குள் நுழையும் அந்த படகைக் குறித்து அவுஸ்திரேலிய அதிகாரிகள் பிரித்தானிய எல்லைப் படைக்கு ஒரு முக்கிய துப்புக் கொடுத்திருக்கிறார்கள்.

அதன்படி, நேற்று பிரித்தானிய பொலிசார் அந்த படகில் ஏறி அதை சோதனையிடுகிறார்கள். அவர்களுக்குக் கிடைத்த துப்பு சரிதான்... அந்த படகில் 2,000 கிலோ கொக்கைன் தண்ணீர் புகாத பைகளில் அடைக்கப்பட்டு அடுக்கிவைக்கப்பட்டிருக்கிறது. அதன் மதிப்பு 280 மில்லியன் டொலர்கள்!

ஒரு பிரித்தானியர், ஐந்து நிகராகுவா நாட்டவர்கள் என மொத்தம் ஆறு பேர் கைது செய்யப்படுகிறார்கள்.

சரி, அந்த செய்திக்கும் வான்கூவரில் வாழும் Peterக்கும் என்ன சம்பந்தம்?

வெற்றிகரமான பிஸினஸ்மேன் மற்றும் பொறியாளராக இருந்த Peter அந்த படகை நியூசிலாந்து கடற்படையிடமிருந்து வாங்கியிருந்தார். அவரும் அவரது காதல் மனைவி Sharonனுமாக அந்த படகை மறுவடிவமைத்தார்கள்.

பிரித்தானிய பொலிசாரிடம் சிக்கிய படகு... மோசமான காரணத்துக்காக தலைப்புச் செய்தியானதால் வருந்தும் கனேடியர் | Boat Stranded By British Police

சாப்பிடவும், தூங்கவும், அப்போது 12 மற்றும் 13 வயதிலிருந்த தங்கள் பிள்ளைகள் படிக்கவும் வசதியாக அந்த படகை ஒரு வீடு போலவே மாற்றி அதில் உலகைச் சுற்றிவந்தார்கள் Peter, Sharon தம்பதி.

அவர்கள் கனடாவின் வான்கூவரை வந்தடைந்தபோது அவரது படகு கட்டும் நிறுவனம் நிதி நெருக்கடிக்கு ஆளாக, அவரது படகு உட்பட அனைத்தையும் இழக்கும் ஒரு நிலை ஏற்பட்டது. பிறகு Peter பொறியாளராக ஒரு நிறுவனத்தில் வேலை தேடிக்கொள்ள, Sharon உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். புற்றுநோயால் அவர் இறந்துவிட தங்கள் சொந்த நாடான நியூசிலாந்துக்கு திரும்பும் என்ணத்தைக் கைவிட்டு கனடாவிலேயே தங்கிவிட்ட Peterஇன் பிள்ளைகள் கனேடியர்களாகவே ஆகிவிட்டார்கள்.

இப்படிப்பட்ட ஒரு நிலைமையில்தான், ஒரு காலத்தில் தன் குடும்பம் ஆசையாக வைத்திருந்த தங்கள் படகு இப்போது போதைப்பொருள் கடத்தலில் சிக்கியுள்ளதைக் குறித்த செய்தியை கவலையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறார் Peter.

மீண்டும் தன் படகை வாங்கவேண்டுமென்ற ஆசை தனக்கு இருக்கிறது என்று கூறும் Peter, ஆனால் அதை வாங்கும் நிலையில் தான் இப்போது இல்லை என்கிறார்.  

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US