கனடாவில் சுரங்க விபத்து: 9 மாதங்களுக்குப் பிறகு தொழிலாளியின் உடல் மீட்பு
கனடாவின் அல்பெர்ட்டா மாகாணத்தில் உள்ள ஃபோர்ட் மெக்முர்ரே பகுதிக்கு வடக்கே அமைந்த எண்ணெய் மணல் சுரங்கத்தில் உயிரிழந்த தொழிலாளி ஒருவரின் உடல், விபத்து நடந்து 9 மாதங்களுக்கும் மேலான போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளது.
கென்னத் ஜோசப் மெக்காலே என்பவரின் உடல் கடந்த வாரம் மீட்கப்பட்டதை ‘சன்கோர் எனர்ஜி’ நிறுவனம் உறுதி செய்துள்ளது. "விபத்து நடந்த நாளிலிருந்தே உடலை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இதற்கு நாங்கள் முதன்மை முக்கியத்துவம் அளித்தோம். இந்த மீட்புப் பணிகள் தொழில்நுட்ப ரீதியாகவும் செயல்பாட்டு ரீதியாகவும் மிகவும் சவாலானவை. ஒவ்வொரு கட்டத்திலும் மீட்புக் குழுவினரின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியமாக இருந்தது.

உயிரிழந்தவரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என சன்கோர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 13-ஆம் திகதி சன்கோர் நிறுவனத்தின் 'ஃபோர்ட் ஹில்ஸ்' சுரங்கத்தில், கென்னத் ஜோசப் மெக்காலே கனரக இயந்திரம் ஒன்றிற்குள் இருந்தபோது, அது சேறு மற்றும் சதுப்பு நிலத்தில் மூழ்கியது.
விபத்து நடந்தபோது மெக்காலேவுக்கு 66 வயது என்பதுடன் இவர் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் உள்ள சூரிஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.