புறப்பட்ட சிறிது நேரத்தில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான போயிங் 737 சரக்கு விமானம்!
அமெரிக்காவின் ஹவாய் மாகாண தலைநகரான ஹொனலுலுவில் இருந்து இன்று புறப்பட்ட போயிங் 737 சரக்கு விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இயந்திரக் கோளாறு காரணமாக கடலில் விழுந்தது.
எனினும் விமானத்தில் இருந்து குதித்த இரு பணியாளர்களும் கடலோர காவல்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த விமானம் ஹவாய் மாகாண தலைநகரான ஹொனலுலுவில் இருந்து மவுய் தீவுக்கு செல்லும் வழியில் இந்த விபத்து இடம்பெற்றது. விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்பட்டு சுமார் 3 கிலோ மீற்றர் தூரம் பறப்பதற்குள் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு கடலில் விழுந்தது.
இந்த விமானத்திற்கு என்ன ஆனது? என்பது குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
இது 2018 மற்றும் 2019 -ஆம் ஆண்டுகளில் அபாயகரமாக விபத்துக்களைச் சந்தித்த பின்னர் பல நாடுகளால் தடை விதிக்கப்பட்ட போயிங் 737 மக்ஸ் போன்றது அல்ல என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.