தினமும் பொது போக்குவரத்துகளில் 30 கிலோமீற்றர் பயணிக்கும் போஜி நாய்
துருக்கியில் தினமும் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தி தினமும் போஜி என்னும் தெரு நாயானது இஸ்தான்புல்லில் உள்ள பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களில் மனிதர்களோடு பயணித்து வருகிறது.
மேலும் இந்த நயந்த எந்த ஒரு இடையூறும் செய்யாமல் தினமும் சென்று வருவதால் போஜி நாய்க்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. மேலும் போஜிக்கு சமூக வலைத்தளத்தில் ஒரு பக்கம் ஆரம்பிக்கப்பட்டு அதில் ரசிகர்கள் தினமும் போஜியுடன் புகைப்படம் எடுத்து பகிர்ந்து வருகின்றனர்.
பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் மட்டுமின்றி போரடித்தால் மர்மரா கடலில் உள்ள தீவுகளுக்கு போஜி படகு சவாரி செய்து பொழுதை போக்குகிறது. மேலும் இந்த போஜியின் செயல்பாட்டைக் கண்காணித்த மாநகராட்சி நிர்வாகம் கூறியதாவது போஜி தினமும் 30 கிலோமீற்றர் வரை பயணிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
@boji_ist @sultanahmet pic.twitter.com/RNDJjwjzsy
— Kerem Özdoğan (@kerem_ozdogan) October 2, 2021