ஈக்வடார் முக்கியப் பாலங்கள் மீது வெடிகுண்டு தாக்குதல்கள்; பீதியில் மக்கள்
தென் அமெரிக்கா நாடான ஈக்வடார் நாட்டில் சமீபத்தில் சட்டவிரோத சுரங்கத் தொழிலுக்கு எதிராக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்த சில நாட்களிலேயே, நாட்டின் முக்கியப் பாலங்கள் மீது பயங்கரமான வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பது மக்கள் மத்தியில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பாலங்கள் தகர்க்கப்பட்டதன் மூலம், பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கியுள்ளது என்ற பீதி மக்களிடையே பரவி வருகிறது. தாக்குதல்களுக்குப் பின்னால், அரசு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட சட்டவிரோத கும்பல்கள் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
உலக நாடுகள் கவலை
முக்கியமான போக்குவரத்துப் பாதைகளில் உள்ள பாலங்கள் குறிவைத்துத் தகர்க்கப்பட்டதால், பல பகுதிகளில் சாலைப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
அரசின் இரும்புக்கரம் பாய்ந்ததால் ஆத்திரமடைந்த கிரிமினல் குழுக்கள்தான் இந்த நாசவேலையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இந்த திடீர் வன்முறையால், நாட்டில் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாகி, மக்கள் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். ஈக்வடாரில் நிலவும் இந்த பயங்கரமான அரசியல்-கிரிமினல் மோதல் தொடர்பில் உலக நாடுகள் கவலையை வெளியிட்டுள்ளன.