விமான நிலைய முனையத்திற்கு அருகில் திடீரென வெடித்த குண்டு! விமான சேவைகள் ரத்து
ஜப்பானில் உள்ள விமான நிலைய முனையத்திற்குக் குறைந்தது 100 மீட்டர் தொலைவில் திடீரென குண்டு வெடிப்பு ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தெற்கு ஜப்பானில் இருக்கும் கியூஷூ தீவில் மியாஸாக்கி விமான நிலையத்திற்கு அருகிலேயே இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து ஜப்பானின் போக்குவரத்து அமைச்சகத்தின்படி,
வெடிகுண்டு அகற்றும் குழு, போர்க்காலத்தின்போது வான்வழித் தாக்குதலில் நிலத்தின் அடியில் புதைந்த அமெரிக்க வெடிகுண்டால் வெடித்தது என்பதை உறுதிப்படுத்தியது.
இந்த குண்டுவெடிப்பு டாக்ஸிவேயில் 7 மீட்டர் அகலமும் 1 மீட்டர் ஆழமும் கொண்ட பள்ளத்தை உருவாக்கியது, இதனால் ஓடுபாதையை மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. மேலும் வெடிப்புகள் ஏற்படும் அபாயம் இல்லை என்றாலும், 87 விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
பள்ளத்தை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது, குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.