பிரெஞ்சு வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த நான்கு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
பிரெஞ்சு வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த நான்கு விமானங்களுக்கு நவம்பர் மாதம் 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை புதிதாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவை பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
எனினும் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி தரையிறங்கிய விமானங்களில் வெடிகுண்டு அகற்றும் பிரிவினர் பாதுகாப்புப் பரிசோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளில் பல வெடிகுண்டு மிரட்டல்கள்
இந்த மிரட்டல்கள் எங்கிருந்து வந்தன என்பதைக் கண்டறிவதற்கான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, இந்த வாரத்தின் ஆரம்பம் முதல் ஐரோப்பிய நாடுகளில் விமானங்களுக்கு எதிராகப் பல வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
ஆரம்பத்தில் போலியான மிரட்டல்கள் விடுக்கப்பட்ட நிலையில், நவம்பர் மாதம் 5ஆம் திகதி வியாழக்கிழமை மட்டும் குறைந்தது 20 விமானங்கள் இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு இலக்காகியிருந்தன.
அவற்றில் பெரும்பாலானவை குறைந்த கட்டண விமானச் சேவைகளைச் சேர்ந்தவையாகும். இதன்போது, Dublin நகரிலிருந்து Rome நோக்கிப் பயணித்த விமானமொன்று வெடிகுண்டு மிரட்டல் காரணமாகத் திசைதிருப்பப்பட்டு, பிரான்ஸின் Eure மாவட்டத்திலுள்ள Évreux இராணுவ விமானத் தளத்தில் தரையிறக்கப்பட்டது.
குறித்த விமானத்தில் 151 பயணிகளும் ஆறு பணியாளர்களும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் அடுத்தடுத்து இடம்பெறும் இத்தகைய சம்பவங்கள் விமானப் போக்குவரத்துத் துறையில் பெரும் பாதுகாப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன