கனடாவில் இந்த மாகாண மக்களுக்கு கிடைக்கும் அதிர்ஸ்டம்
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வறிய குடும்பங்களுக்கான நலன்புரி திட்டங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தின் மூலமாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நன்மையடைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் முதல்வர் டேவிட் எபி இது தொடர்பில் அறிவித்துள்ளார்.
வாழ்க்கைச் செலவு பிரச்சனையினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் மாகாண அரசாங்கம் இந்த நலன் புரித் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
கடந்த ஆண்டிலும் இந்த கொடுப்பனவு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் 18 வயதிற்கும் குறைந்த பிள்ளைகளை உடைய குடும்பங்களுக்கு மாகாண அரசாங்கம் இந்த குடும்ப நலன் திட்டத்தை வழங்குகின்றது.
சர்வதேச பணவீக்க வீதம், வட்டி வீத மாற்றம், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்ற காரணிகளினால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.
மாகாண அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய நலன்புரி தொகையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 340000 குடும்பங்கள் நலன்புரி திட்டத்தின் மூலம் நன்மை அடைய உள்ளன.
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் 66000 குடும்பங்கள் மேலதிகமாக நன்மை பெற்றுக் கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சராசரியாக குடும்பம் ஒன்று சுமார் 2000 டாலர்களை பெற்றுக் கொள்ளும் என தெரிவிக்கப்படுகிறது.
தேறிய வருமானம் மற்றும் பிள்ளைகளின் எண்ணிக்கை போன்ற காரணிகளின் அடிப்படையில் இந்த கொடுப்பனவுத் தொகை தீர்மானிக்கப்படுகின்றது.
ஒற்றை பெற்றோரை உடைய குடும்பங்களுக்கு கூடுதல் தொகை வழங்கப்படுகின்றது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் சுமார் 70 வீதமான குடும்பங்கள் இந்த நலன்புரி திட்டத்தின் மூலம் இந்த ஆண்டில் நன்மை அடைய உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.