கனடாவில் பணியிடத்தில் மோசடி செய்தவருக்கு நீதிமன்றம் வழங்கிய கடும் தண்டனை!
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் தான் பணியாற்றிய நிறுவனத்தில் ஒரு மில்லியன் டாலர் மோசடி செய்த நபர் ஒருவருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் கொல்நெவா பகுதியில் கணக்கு பதிவாளராக பணியாற்றிய பெண் ஒருவரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார்.
62 வயதான கரை சூசன் இயர்ஸ் என்ற பெண் இவ்வாறு நீதிமன்றதினால் தண்டிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையில் இந்த கொள்ளைச் சம்பவம் இந்த இந்த மோசடி சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் ஓர் முகவர் நிறுவனத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த பெண் சுமார் 1.3 மில்லியன் டாலர்களை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீண்ட காலமாக திட்டமிட்ட அடிப்படையில் இந்த பெண் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக நீதிமன்றில் நிரூபணமாகியுள்ளது.