கனடிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவின் புதிய தொழில்நுட்பம்
கனடிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவினர் புதிய தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முக அடையாளத் தொழில்நுட்பம் (facial recognition) அலைபேசிகள் ஊடாக பயன்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முக அடையாளத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் எல்லைப் பகுதிகளில் நேரத்தை சேமிக்க முடியும் என எல்லைப் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தொழில்நுட்பத்தின் மூலம் பயணிகளின் நேரத்தை சேமிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதற்காக 25 மில்லியன் டொலர்கள் வரையில் செலவிடப்பட உள்ளது.
பயணிகளின் கடவுச்சீட்டில் உள்ள புகைப்படம், பயனர்களின் அலைபேசியில் எடுக்கப்பட்ட செல்பியுடன் (Sefie) ஒப்பீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.