வார இறுதியில் விடைபெறுகிறார் போரிஸ் ஜான்சன்!
இந்த வார இறுதியில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) தனது பதவி விலகலை அண்மித்து வருகின்றார்.
1921 ஆம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் பிரதம மந்திரிகளின் உத்தியோகபூர்வ வசிப்பிடமாக இருக்கும் பக்கிங்ஹாம்ஷையர் தோட்டத்தில் உள்ள செக்கர்ஸில் திரு திருமதி ஜான்சனிடமிருந்து (Boris Johnson) விருந்துக்கு வார தொடக்கத்தில் அழைப்புகள் வந்துள்ளன.

இந்த வார இறுதியில் செக்கர்ஸில் அவர்களின் பிரியாவிடை விழா இடம்பெறவுள்ள நிலையில் இதற்கு கூட்டாளர்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை டவுனிங் ஸ்ட்ரீட், தற்போதைய வெப்ப அலைக்கு பதிலளிக்கும் வகையில், தேசிய அவசரநிலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் , இன்று பிற்பகல் அவசர கோப்ரா கூட்டத்தில்  போரிஸ் ஜான்சன் (Boris Johnson)  கலந்து கொள்ள மாட்டார் என்பதை உறுதிப்படுத்தினார்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        