நண்பரின் தவறால் அமெரிக்க விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட குத்துச்சண்டை வீரர்!
அமெரிக்க விமானத்திலிருந்து பிரித்தானிய குத்துச்சண்டை வீரர் அமிர் கான் வெளியேற்றப்பட்டுள்ளார்.
அமிர்கானுடன் சென்ற நண்பர் சரியான உயரத்தில் முகக்கவசத்தை அணியவில்லை என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரிலேயே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளார்.
நிறுவனங்கள் பின்பற்றும் சுகாதார நடைமுறைகளை அமிர் கான் அல்ல எந்த ஒரு நபராக இருந்தாலும் கடைபிடிக்க வேண்டும் என்றும் பொலிஸார் இந்த விடயத்தில் தலையிடவில்லை என்றும் அமெரிக்க விமான சேவை நிறுவனத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
நியூயோர்க்கிலிருந்து கொலராடோவிற்கு பயிற்சி முகாமுக்கு சென்ற சந்தர்ப்பத்திலேயே தான் இவ்வாறு முறையற்ற விதத்தில் நடத்தப்பட்டதாக ட்விட்டரில் அமிர் கான் தெரிவித்துள்ளார்.
என்றாலும் தனது பயணத்தை வேறு விமான சேவையில் தொடர்ந்ததாகவும் வேதனையுடன் அமிர கான் தெரிவித்துள்ளார்.