விஷம் குடித்து உயிரை மாய்த்த இளைஞன்: பொலிஸாரிடம் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்

Attempted Murder Chennai Tamil Nadu Police Death
By Shankar Apr 18, 2023 11:54 PM GMT
Report

சென்னையில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இளைஞர் ஒருவர் சிகிச்சையில் இருந்த போது பொலிஸாரிடம் அதிர்ச்சி வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார்.

காதலியான சிறுமி விஷம் கொடுத்து தன்னை கொலை செய்து விட்டதாக பரப்பான குற்றச்சாட்டுகளை அந்த வாக்குமூலத்தில் கூறி இருந்தார்.

விஷம் குடித்து உயிரை மாய்த்த இளைஞன்: பொலிஸாரிடம் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம் | Boyfriend Dead Drinking Poison Shocking Confession

சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரும், ராமநாதபுரத்தை சேர்ந்த 18 வயது நிரம்பாத வாலிபர் ஒருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகினர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட இந்த பழக்கம் காதலாக மாறியது.

இதைத் தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அண்ணாநகர் மகளிர் பொலிஸில் முறைப்பாடு அளித்தனர்.

விஷம் குடித்து உயிரை மாய்த்த இளைஞன்: பொலிஸாரிடம் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம் | Boyfriend Dead Drinking Poison Shocking Confession

பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் இளைஞரை கைது செய்தனர்.

18 வயது ஆகாத நிலையில் அவர் மீது கைது நடவடிக்கை பாய்ந்ததால் கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் பொலிஸார் அடைத்தனர். இதன் பின்னர் அவர் பிணையில் வெளியில் வந்தார்.

தற்போது 18 வயது ஆகி விட்ட நிலையில் திருப்போரூரில் உள்ள டாஸ்மாக் கடையில் வேலை செய்து வந்தார்.

விஷம் குடித்து உயிரை மாய்த்த இளைஞன்: பொலிஸாரிடம் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம் | Boyfriend Dead Drinking Poison Shocking Confession

இதன் பின்னரும் சிறுமியை மறக்க முடியாத நிலையில் வாலிபர் அவருடன் தொடர்பு கொண்டு உள்ளார். இருவருக்குமிடையே மீண்டும் காதல் மலர்ந்தது. அடிக்கடி சந்தித்து பேசிக்கொண்டனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயம்பேட்டில் வைத்து இருவரும் சந்தித்து பேசினார்கள். இதுபற்றி தெரியவந்ததும் சிறுமியின் உறவினர்கள் அங்கு விரைந்து சென்று இளைஞரை அடித்து உதைத்தனர்.

சிறுமியை தங்களோடு அழைத்துச் சென்றதுடன் வாலிபரை எச்சரித்துவிட்டும் சென்றனர். இதனால் மனமுடைந்த வாலிபர் விஷம் குடித்து உயிருக்கு போராடினார்.

இது தொடர்பில் தகவல் கிடைத்ததும் கோயம்பேடு பொலிஸார் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி கடந்த 14-ஆம் திகதி உயிரிழந்தார்.

இதையடுத்து பொலிஸார் பிரேத பரிசோதனை செய்து வாலிபரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

இதற்கிடையே வாலிபரின் மரணத்தில் திடுக்கிட வைக்கும் வகையில், காதலியால் விஷம் கொடுத்து வாலிபர் கொலை செய்யப்பட்டிருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது.

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இளைஞர் சிகிச்சையில் இருந்த போது பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதில் காதலியான சிறுமி விஷம் கொடுத்து தன்னை கொலை செய்து விட்டதாக பரப்பான குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். இது போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து பொலிஸார் அது தொடர்பாக விசாரணை நடத்தினர். வாலிபர் சொல்வது உண்மைதானா? என்பதை கண்டு பிடிப்பதற்காக விஷம் கொடுத்ததாக கூறப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று அங்குள்ள கண்காணிப்பு கமராக்களை போட்டு பார்த்தனர்.

அப்போது இளைஞர் பொய்யான வாக்குமூலத்தை அளித்திருப்பதும், சிறுமி மீது பழி போடும் எண்ணத்துடன் செயல்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து கைது நடவடிக்கையில் இருந்து சிறுமி தப்பியுள்ளார்.

அறியாத பருவத்தில் ஏற்படும் காதல் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த சம்பவம் பெரிய சாட்சியாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US