பாம்பை ஸ்கிப்பிங் கயிறாக்கி விளையாடிய சிறுவர்கள்
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள வூராபிண்டா என்ற இடத்தில் சிறுவர்கள் சிலர் ஒரு இறந்த பாம்பை ஸ்கிப்பிங் கயிறாகப் பயன்படுத்தி விளையாடுவதைக் காட்டும் ஒரு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தீயாக பரவி வருகிறது.
இந்தச் சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில் அந்நாட்டு சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலா துறை குறித்த செயற்பாட்டை கண்டித்துள்ளது.
விசாரணைகள் ஆரம்பம்
மேலும், இது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருப்புத் தலை பைத்தான் என்பது அவுஸ்திரேலியாவில் பாதுகாக்கப்பட்ட உயிரினமாகும், இது விஷமற்றது மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பாம்பை காயப்படுத்துவது அல்லது கொல்வது சட்டவிரோதமானது.
மேலும் இதற்காக அதிகபட்சமாக 12,615 அவுஸ்திரேலிய டொலர் (சுமார் 23.5 இலட்சம் ரூபாய்) அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
சிறுவர்கள் விளையாடிய பாம்பு முன்னரே இறந்திருந்ததா அல்லது அவர்களால் கொல்லப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பபமாகியுள்ளன.