அமெரிக்காவை கடுமையாக கண்டிக்கும் பிரேஸில்
அமெரிக்காவின் நடவடிக்கைகளை பிரேஸில் அரசாங்கம் கடுமையாக கண்டித்துள்ளது.
அமெரிக்க ராணுவம் வெனிசுவேலா மீது இராணுவத் தாக்குதலை மேற்கொண்டமை கண்டிக்கப்பட வேண்டிய செயல் என தெரிவித்துள்ளது.
அமெரிக்க நாடுகளுக்கான பேரவையின் அவசரக் கூட்டத்தில் பிரேசில் பிரதிநிதி பெனோனி பெல்லி இந்த செயல்களை கடுமையாக விமர்சித்து உள்ளார்.

வெனிசுவேலா நிலத்தில் நடந்த தாக்குதல்கள் மற்றும் அதன் ஜனாதிபதியை கடத்தி அழைத்துச் செல்லும் செயல் ஏற்கமுடியாத செயல் என தெரிவித்துள்ளார்.
இந்த செயல்கள் வெனிசுவேலாவின் இறையாண்மையை மோசமாக பாதிக்கும் செயற்பாடு என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகள் உலக நாடுகளுக்கு பிழையான முன்னுதாரணத்தை வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை பிரேசில் அரசு, டிரம்ப் தலைமையில் கொலம்பியா, மெக்சிகோ மற்றும் கியூபா போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு எதிராக இடம்பெறும் வாய்மொழித் தாக்குதல்களை நேரடியாக விமர்சிக்கவில்லை.
எனினும் வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் தாக்குதல்களை அமெரிக்கா மோசமாக கண்டித்துள்ளது.