குடும்பத்தை பிரிந்தது கடினமாக இருந்தது! இளவரசர் ஹாரி வெளியிட்ட தகவல்
பிரிட்டன் அரச குடும்பத்தைவிட்டு நிரந்தரமாக விலகிய காலகட்டம் மிகவும் கடினமாக இருந்தது. இப்போது தான் நிம்மதியாக இருக்கிறோம், என இளவரசர் ஹாரி தெரிவித்தார். பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் பேரனும், இளவரசர் சார்லஸ் - டயானா தம்பதியின் மகனுமான, இளவரசர் ஹாரி, அமெரிக்க நடிகை மேகன் மெர்க்கலை, 2018ல் காதலித்து திருமணம் செய்தார்.
இந்த திருமணத்தில் அரச குடும்பத்தினருக்கு முழு சம்மதம் இல்லாததை அடுத்து, கருத்து வேறுபாடுகள் நிலவின. இதையடுத்து, பிரிட்டன் அரச குடும்பத்தில் இருந்து அதிகாரப்பூர்வமான விலகுவதாக, ஹாரி கடந்த ஆண்டு அறிவித்தார். 'ஒரு ஆண்டுக்கு பின், இது குறித்து முடிவு அறிவிக்கப்படும்' என, ராணி எலிசபெத் தெரிவித்தார்.
ஹாரி - மேகன் தம்பதியை, அரச குடும்பத்தில் இருந்து நிரந்தரமாக விடுவிக்க சம்மதிப்பதாக, பிரிட்டன் அரச குடும்பத்தினர், சமீபத்தில் உறுதி செய்தனர்.
இந்நிலையில், பிரபல அமெரிக்க, 'டிவி' நிகழ்ச்சி தொகுப்பாளரான, ஓபரா வின்ப்ரேவின் நிகழ்ச்சியில், ஹாரி - மேகன் சமீபத்தில் பேட்டி அளித்தனர்.