பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த பின் பிரித்தானியாவின் அடுத்த நகர்வு
பலஸ்தீனத்திற்கான அதிகாரபூர்வ தூதரகம் லண்டன் நகரில் திறக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் பிரித்தானியா, பலஸ்தீனத்தை தனி நாடாக அதிகாரபூர்வமாக அங்கீகரித்தது.
இதன் அடுத்த கட்ட நகர்வாக பலஸ்தீனத்திற்கான தூதரகம் லண்டன் நகரில் திறக்கப்பட்டுள்ளது.

திறப்பு விழாவில் உரையாற்றிய பலஸ்தீனத்திற்கான தூதுவர் ஹூசாம் சோம்லோட், இந்த தருணம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது.
நூற்றாண்டுகளுக்கு மேலாக தன்னாட்சி உரிமை கோரி வரும் எங்கள் நாட்டு மக்களுக்கு கிடைத்துள்ள மரியாதையான அங்கீகாரமாகும்.
பலஸ்தீனியர்கள் காசா, கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்கு கரை என எங்கிருந்தாலும் அவர்களின் அடையாளத்தை அழிக்க முடியாது என்பதற்கான சிறந்த சான்று இந்த தூதரகம் என்று தெரிவித்துள்ளார்.