ரஷ்யாவுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவலை வெளியிட்ட பிரித்தானியா ; போர் முடிவுக்கு வருமா?
உக்ரைனிலிருந்து ரஷ்யா, தனது படைகளை மீட்டுக்கொண்டு அத்துமீறலை நிறுத்தினால் ரஷ்யத் தனிநபர்கள் மீதும், ரஷ்ய நிறுவனங்கள் மீதும் விதிக்கப்பட்டுள்ள தடைகள் மீட்டுக்கொள்ளப்படலாம் என பிரிட்டன் தெரிவித்துள்ளது.
இதனை டெலிகிராப் நாளேட்டுக்கு வழங்கிய நேர்காணலில் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் கூறினார். ரஷ்யா, தான் கையெழுத்திட்டுள்ள பல்வேறு உடன்பாடுகளை மீறி நடந்துவருகிறது.
ஆகவே தடை விதிப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டார். அதேவேளை முழுமையான சண்டை நிறுத்தம் ஏற்பட்டுப் படைகள் மீட்டுக்கொள்ளப்பட்டால் மட்டுமே அந்தத் தடைகள் விலக்கிக் கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.
அதேசமயம் அடுத்த கட்ட அத்துமீறல் இருக்காது என்ற உத்தரவாதமும் வழங்கப்பட வேண்டுமென டிரஸ் குறிப்பிட்டார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிக்கை அடுத்து, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன இதுவரை 1,000க்கும் அதிகமான ரஷ்ய தனி நபர்கள் மற்றும் வர்த்தகங்கள் மீது தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.