பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர் கொழும்பில் அதிரடியாக கைது
பிரித்தானியாவிலிருந்து தீவிரவாத அமைப்புக்கு பணம் வசூலித்ததாக பிரிட்டன் வாழ் புலம்பெயர் தமிழர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரால் சேகரிக்கப்பட்ட பணம் கொழும்பு மற்றும் வன்னி பிரதேசத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 2009 ஆம் ஆண்டு இலங்கையை விட்டு சென்று பிரித்தானிய குடியுரிமை பெற்ற கிளிநொச்சி பகுதியை சேர்ந்த 43 வயதுடையவர் ஆவார்.
பிரித்தானிய குடியுரிமை பெற்ற புலம்பெயர் தமிழர்
கொழும்பு நீதிவான் நீதிமன்றில் கொழும்பு வடக்கு குற்றப் பிரிவினரால் பெறப்பட்ட பயணத் தடை உத்தரவின் அடிப்படையில் சந்தேகநபர் நேற்று (30) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோது கைது செய்யப்பட்டுள்லார்.
புலம்பெயர் தமிழரை குடிவரவு பிரிவினர் பொறுப்பேற்று விமான நிலைய பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் விமான நிலைய பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மற்றும் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.