கனடிய பொலிஸார் மீதான பாரதூர குற்றச்சாட்டு
கனடாவில் கறுப்பின மற்றும் பழங்குடியின சமூகம் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கனடிய போலீசார் மீது இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மட்டும் செப்டம்பர் மாதங்களில் 9 பழங்குடியினத்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பொலிஸாருடன் ஏற்பட்ட மோதல் சம்பவங்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன. பழங்குடியின மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அடக்குமுறைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என பழங்குடியின சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்மையில் பழங்குடியின மற்றும் கறுப்பின சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் கனடிய நாடாளுமன்றத்திற்கு எதிரில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
தமது சமூகத்தின் மீதான அடக்குமுறைகளை கண்டிக்க வேண்டும் எனவும் இந்த மரணங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் பழங்குடியினர் சமூகத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் உரிய முறையில் சரியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.