பிரிட்டிஷ் கொலம்பியாவிலிருந்து வேறும் மாகாணங்களுக்கு குடிப்பெயர்தல் அதிகரிப்பு!
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் மக்கள் ஏனைய மாகாணங்கள் நோக்கி குடிப்பெயர்தல் அதிகரித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலப் பகுதியில் அதிகளவான பிரிட்டிஷ் கொலம்பிய வாழ் மக்கள், ஏனைய மாகாணங்களில் குடியேறியுள்ளனர்.
கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த விபரங்களை தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஐந்து காலாண்டு பகுதியாக இவ்வாறு உள்ளக குடிப்பெயர்வு பதிவாகியுள்ளது.
மாகாணத்தை விட்டு வெளியேறி நகர சனத் தொகை எண்ணிக்கை 4634 எனத் தெரிவிக்கப்படுகின்றது.
2023ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுப் பகுதியில் 17186 பேர் பிரிட்டிஷ் கொலம்பியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.
குறித்த காலப் பகுதியில் மாகாணத்திற்குள் குடிப்பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை 12552 என்பது குறிப்பிடத்தக்கது.