அதிபர் டிரம்ப் வருகையால் கொந்தளிக்கும் பிரிட்டன் மக்கள்; விண்ணில் பறக்கவிடப்பட்ட ராட்சச பலூன்
பிரிட்டன் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வெள்ளமென திரண்டு வீதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டாவது முறையாக பிரிட்டனுக்கு வருகை தந்துள்ள நிலையில், அவருக்கு அளிக்கப்படும் அரச மரியாதைகளுக்கு எதிராக மக்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இனப்படுகொலையை ஆதரிப்பவருக்கு நோ
டிரம்பின் இனவெறி, இஸ்லாமிய எதிர்ப்பு மற்றும் அகதிகளுக்கு எதிரான கொள்கைகள் பிரிட்டனின் மதிப்புகளுக்கு எதிரானது என போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, ‘டிரம்பின் குழந்தை பலூன்’ என செல்லமாக அழைக்கப்படும் ராட்சச பலூன் மீண்டும் விண்ணில் பறக்கவிடப்பட்டுள்ளது .
அத்துடன், ‘பயங்கரவாதிக்கு இடமில்லை!’, ‘இனப்படுகொலையை ஆதரிப்பவருக்கு நோ போன்ற பதாகைகளை ஏந்தியபடி, ஆயிரக்கணக்கான மக்கள் கண்டன ஊர்வலங்களில் பங்கேற்றனர்.
லண்டனின் பல்வேறு பகுதிகளில் குவிந்த மக்கள், டிரம்பின் கொள்கைகளால் உலகளவில் மனித உரிமைகள் பாதிக்கப்படுவதாகவும், இனவெறி பரவுவதாகவும் குற்றம் சாட்டினர் .
அதேவேளை , அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையின்போது போராட்டக்காரர்களை சந்திப்பதை தவிர்க்கும் வகையில், ராணுவ மரியாதைகள் மற்றும் அரச குடும்பத்தினருடனான சந்திப்புகள் லண்டனுக்கு வெளியே, விண்ட்சர் கோட்டை அருகே நடத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் பிரிட்டன் அரசின் இந்த முடிவு, டிரம்பை அவமானங்களில் இருந்து பாதுகாக்கவே ன்றும் போராட்டக்காரர்கள் விமர்சித்துள்ளனர்.