யாழிற்கு விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய இளவரசி ஆன்!
பிரித்தானிய இளவரசி ஆன் மற்றும அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் உள்ளிட்ட குமுவினர் மூன்று நாட்கள் விஜயமாக இலங்கைக்கு நேற்றைய தினம் வந்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் இன்றைய தினம் (11-01-2024) பிரித்தானிய இளவரசி ஆன் மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விசேட உலங்கு வானூர்தி மூலம் வருகை தந்த இளவரசி, யாழ்ப்பாணம் நாவாந்துறை பொது மைதானத்தில் தரையிறங்கிய போது, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவரை வரவேற்றுள்ளார்.
இந்த சந்திப்பின்போது, பிரித்தானிய இளவரசி ஆன் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோருக்கு இடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.