நியூயோர்க்கில் திடீரென இடிந்து விழுந்த அடுக்குமாடி குடியிருப்பு; 8 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணத்தில் உள்ள புரூக்ளின் பகுதியில், 3 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று நேற்று திடீரென இடிந்து விழுந்ததில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த அனர்த்தத்தில் 2 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குடியிருப்பு கட்டிடத்திற்கு அருகில் உள்ள இடத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அடுக்குமாடி கட்டிடத்தின் இடிபாடுகள் கட்டுமானம் நடந்த இடத்தின் மீது விழுந்தன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். மழை காரணமாக மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டது.
விபத்து நடந்தபோது கட்டிட பணியாளர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படும் நிலையில் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.